அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் நாளை திறக்கப்பட உள்ளது.
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ரவினாத ஆரியசிங்க மற்றும் தூதரக உத்தியோகத்தர்கள் நான்கு பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த கொவிட் தொற்றாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.