கொவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு!

Report Print Kamel Kamel in சமூகம்
121Shares

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மூன்று கொவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்வடைந்துள்ளது.

1. நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 62 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் வைத்து கடந்த 8ம் திகதி உயிரிழந்துள்ளார்.கொவிட், நிமோனியாவால் இவர் உயிரிழந்துள்ளார்.

2. கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் பிம்புர வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட், நிமோனியா மற்றம் புற்று நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.

3. ரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர் ரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட், நிமோனியா மற்றும் இருதய நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப்பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.