ஓட்டமாவடியில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Navoj in சமூகம்
50Shares

மட்டக்களப்பபு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று வரை 36 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது உறவினர்களுக்கு நேற்று உலமா சபை கட்டிடத்தில் 84 பேருக்கு செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளர்.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிப்பதனை தடுக்கும் நோக்கில் பிரதேச செயலகம், பிரதேச சபை, இராணுவத்தினர், பொலிஸார்,வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் சுகாதார தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்துள்ளார்.