மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை இடித்து அகற்றியதைக் கண்டித்தே திங்கட்கிழமை (11) வடக்கு, கிழக்கில் பூரணஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஹாத்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ள போதிலும் மாணவர்கள் சென்றிருக்கவில்லை.
களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு, காத்தான்குடி, வாழைச்சேனை, கொக்கட்டிச்சோலை, உட்படப் பல நகரங்களிலும் கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன் அனைத்து அலுவல்களும் ஸ்தம்பித்திதுள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது.