பெண் ஒருவரால் பலருக்கு ஏற்பட்ட பாதிப்பு! பிறந்த நாளில் ஏற்பட்ட விபரீதம்

Report Print Vethu Vethu in சமூகம்
383Shares

கொரோனா நோயாளி சாப்பிட்ட கேக் துண்டை 16 பேருக்கு ஊட்டியதால் சிக்கல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

காலி சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைச்சாலை பெண் அதிகாரியே தனது வீட்டில் பிறந்த நாள் விருந்து ஒன்றை நடத்தியுள்ளார்

அத்துடன் அயலவர் வீட்டில் நடந்த தானம் ஒன்றிலும் அவர் கலந்து கொண்டுள்ளதாக காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வைத்தியர் வெனுர கே.சிங்காரச்சி தெரிவித்துள்ளளார்.

சிறைச்சாலை அதிகாரியின் மகனின் பிறந்த நாளுக்காக விருந்து நடத்தப்பட்டுள்ளது. மகனால் தாய்க்கு கேக் ஊட்டப்பட்டுள்ளது. அவர் சாப்பிட்ட கேக் துண்டை 16 பேருடன் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் குறித்த அதிகாரி கலந்து கொண்ட தானம் வழங்கும் நிகழ்வில் 41 பேர் பங்கேற்றதாக தெரிய வருகிறது. மேலும் குறித்த அதிகாரியால் விகாரையின் தேரர்களுக்கு தானம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் தொடர்புபட்ட அனைத்து இடங்களிலும் PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.