களுத்துறை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் 75 கொரோனா தொற்றாளர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்
33Shares

களுத்துறை மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் திடீரென மேற்கொள்ளப்பட்ட உடனடியான ரெபீட் அன்டிஜன் பரிசோதனையில் 75 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முடிவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 703 பேருக்கு உடனடியான ரெபீட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அளுத்கமை பொலிஸ் பிரிவில் காலி வீதியில் 18 முறை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஆயிரத்து 894 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் தர்கா நகரில் 254 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

பேருவளை நகர் மற்றும் மீன்பிடி துறைமுக பகுதிகளில் 265 பேருக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் பயாகல பொலிஸ் பிரிவில் மக்கொன அக்கர மலே பிரதேசத்தில் 290 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் பேருவளை பிரதேச செயலாளர் சத்துர மல்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.