யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்றைய தினம் மாணவர் ஒருவரை பொலிஸார் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடித்து அழிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களால் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்றையதினம் இடிக்கப்பட்ட குறித்த நினைவுத்தூபியை மீண்டும் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரால் நாட்டப்பட்டது.
அதன் பின்னர் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களின் இருப்பிடத்திற்கு துணைவேந்தர் உள்ளிட்ட குழு செல்லும்போது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.