யாழ்.பல்கலை மாணவர்களின் போராட்டம் நிறைவு அல்ல! ஒத்தி வைப்பு

Report Print Kanmani in சமூகம்

யாழ்.பல்கலை மாணவர்களின் போராட்டம் நிறைவு அல்ல! ஒத்தி வைப்பு என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடித்து அழிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களால் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்றையதினம் இடிக்கப்பட்ட குறித்த நினைவுத்தூபியை மீண்டும் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரால் நாட்டப்பட்டது.

அதன் பின்னர் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களின் இருப்பிடத்திற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் சென்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,