நாட்டின் பல இடங்களில் தங்கச் சுரங்கங்கள்!

Report Print Vethu Vethu in சமூகம்
3189Shares

இலங்கையின் பல பகுதிகளில் தங்கச் சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் நான்கு பகுதிகளில் தங்கம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணத்தில் இந்த தங்க புதையல் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் இரத்தினக்கல் மற்றும் நகை நிலையம், கனடா, அயர்லாந்து ஆகிய ஆய்வு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் இலங்கையின் நிலபரப்பில் தங்கம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேருவில பிரதேசத்தில் இரும்பு அமைந்துள்ள இடங்களில் மூன்று, நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் தங்கம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேருவில பிரதேசத்திற்கு அருகில் தங்கம் உள்ளமை பேராதனை பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

நிலத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 600 அடி தோண்டிய பின்னர் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த பிரதேசங்களில் ஒரு தொன் கல் அகழ்வு மேற்கொள்ளும் போது 5 கிராம் வரையில் கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பில் தொடர்ந்து ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கு மேலதிகமாக ஏனைய பகுதிகளில் நான்கு சதுர கிலோமீட்டர், அளவு தங்கம் உள்ளது. அரசாங்கம் அல்லது வேறு நிறுவனங்களின் உதவி கிடைக்கும் என்றால் தொடர்ந்து அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தங்கங்களை முறையாக அகழ்ந்து எடுத்தால், பாரிய கடன் சுமையில் சிக்கியுள்ள இலங்கையின் முழு கடனையும் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.