மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதையடுத்து பி.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினால் நேற்று 100 பேரிடம் கொரோனா தொற்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
கல்லடி மீன் சந்தைக் கட்டடத்தில் இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனை முகாமில் தொற்று உறுதியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், உள்ளூராட்சி சபைகளில் கடமை புரியும் நகரச் சுத்தி தொழிலாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோட்டை முனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் கல்லடி பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.