வவுனியாவில் ஆலயங்களில் கொரோனா விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் நிர்வாகத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Report Print Theesan in சமூகம்
59Shares

கொரோனா சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாவிடின் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஆலயத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

இந்த சந்தர்ப்பத்தில் தங்களாலும் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே இது தொடர்பாகவும் ஆராய வேண்டும் என்று இந்து மதகுருவால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர்,

ஆலயங்களில் பூசை நடைமுறைகள் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினருக்கு உரிய முறையில் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே,அந்த சுகாதார நடைமுறைகள் மீறப்படும் பட்சத்தில் அந்த ஆலயங்களின் நிர்வாகத்தினருக்கு எதிராக கொரோனா விதிமுறைகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.