பொது சுகாதார பரிசோதகர் எனக்கூறி தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற பெண்! யாழில் சம்பவம்

Report Print Sumi in சமூகம்
162Shares

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் எனக்கூறி பெண்ணொருவரின் தாலிக்கொடி மற்றும் சங்கிலி போன்றவற்றை அறுத்த பெண்ணொருவரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த பெண் இன்று காலை தொண்டமனாறு அரசடி பகுதியில் உள்ள ஊர்களுக்குச் சென்று தான் பொது சுகாதார பரிசோதகர் என்று கூறி கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் செய்ய வந்ததாகவும், முகக் கவசம் அணிவது தொடர்பாகவும் கேட்டு அனைவரின் வீடுகளிலும் சென்று பார்வையிட்டுள்ளார்.

அதன்போது ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்ற இந்தப் பெண் அவர் அணிந்திருந்த தாலிக் கொடி மற்றும் சங்கிலியை திருடிய பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் அந்தோனிபுரம் வீதியால் தப்பிச் சென்றுள்ளார்.

நகைகளை பறிகொடுத்த பெண் கூச்சலிட்டபோது, அப்பகுதி இளைஞர்கள் துரத்திச் சென்று, மடக்கிப் பிடித்துள்ளனர்.

இளைஞர்களால் பிடிக்கப்பட்ட அந்த பெண் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.