மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதியம் 12 மணிவரை சேகரிக்கப்பட்ட தகவலிற்கு அமைவாகச் சீரற்ற வானிலை காரணமாக கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 18 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை,முள்ளியவளை மேற்கு கிராம சேவகர் பிரிவில் இரு வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.