வவுனியாவில் மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

Report Print Theesan in சமூகம்
101Shares

வவுனியா நகரப்பகுதிகளைச் சேர்ந்த 7 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள பரிசோதனைக் கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் வவுனியா நகர்ப்பகுதிகளைச் சேர்ந்த 7 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்ப்பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 130 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.