இலங்கையில் மேலும் நால்வர் கொரோனாவிற்கு பலி!

Report Print Murali Murali in சமூகம்
145Shares

இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் 584 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,553 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் நான்கு மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கையில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 244 ஆக உயர்வடைந்துள்ளது.

1. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் கடந்த 10ம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் இரத்தம் விசமாகியமை ஆகிய காரணங்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.

2. ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான ஆண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.

3. மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் இன்றுற உயிரிழந்துள்ளார். கொவிட் காரணமாக இருதயத்திற்கான இரத்த ஓட்டம் தடைப்பட்டதனால் இவர் உயிரிழந்துள்ளார்.

4. வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.