இணையம் மூலமாக விற்பனை செய்யப்பட்ட 673 மில்லியன் ரூபா பரிசூதிய சீட்டு!விசாரணை நடத்துமாறு கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்
104Shares

இணையம் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பரிசூதிய சீட்டுக்களின் 673 மில்லியன் ரூபா மகாபொல உயர் கல்வி உதவித்தொகை அறக்கட்டளை நிதிக்கு கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக்குழுவான கோப் விசாரணைகளின் போது இது கண்டறியப்பட்டுள்ளது.

இது ஒரு பெரிய அளவிலான ஊழலாகும்.எனவே முறையான விசாரணை தொடர்பில் சட்டமா அதிபர் ஊடாக குற்றவியல் புலனாய்வுத்துறைக்கு பரிந்துரைக்குமாறு கோப் தலைவர் சரித்த ஹேரத், வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.பத்ரானி ஜெயவர்தனவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.