மாஞ்சோலை கிராமத்தில் 187 அன்டிஜன் பரிசோதனை!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
39Shares

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் 187 அன்டிஜன் பரிசோதனைகளும், 133 பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் இன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பரிசோதனைகளின் போது தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம் றிஸ்வி தெரிவித்தார்.

மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் ஹிஜ்ரா வீதியில் இரு இடங்களிலும், அகமட் லேன் பகுதியிலும் எழுமாற்றாக அன்டிஜன் மற்றும் பீ. சீ .ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று பெறப்பட்ட பீ.சீ.ஆர் மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பவுள்ளதாகவும், மக்கள் அன்டிஜன் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து மாஞ்சோலை கிராமத்தை விடுவிக்க முடியும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம். றிஸ்வி குறிப்பிட்டார்.