நாட்டை காப்பாற்ற வேண்டுமாயின் இன்னும் 6 மாதங்கள் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்! சுகாதார அமைச்சர்

Report Print Steephen Steephen in சமூகம்
130Shares

கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டுமாயின் மக்கள் அடுத்த ஆறு மாதங்கள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார பழக்க வழக்கங்களை மக்கள் அர்ப்பணிப்புகளைச் செய்து அடுத்த ஆறு மாதங்களுக்குப் பின்பற்ற வேண்டும்.

அப்படிச் செய்தால் மாத்திரமே நாட்டை காப்பற்ற முடியும் எனவும் அமைச்சர் வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நேற்றைய தினம் வரை மொத்தமாக 49 ஆயிரத்து 537 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்யை தினத்தில் மாத்திரம் 588 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 42 ஆயிரத்து 621 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 6 ஆயிரத்து 672 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.