மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா

Report Print Saravanan in சமூகம்
57Shares

மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் எழுந்தமானமாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தொடர்ச்சியாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் ஏனையோருக்கும் செய்யப்பட்ட 132 பி.சி.ஆர் பரிசோதனையில் தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார பிரிவில் 3 பேர் உட்பட 12 பேருக்கும் தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நாளாந்தம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.