கொழும்பில் சில இடங்களை மீண்டும் தனிமைப்படுத்தும் ஆபத்து - அஜித் ரோஹன

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சில பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த வேண்டிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாது செயற்பட்டு வருவதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு நகரில் மக்களின் செயற்பாடுகளை கண்காணிக்க சாதரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் நடந்து கொள்ளும் விதம் காரணமாக மீண்டும் கொரோனா கொத்தணி மற்றும் உப கொத்தணிகள் ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. இதன் காரணமாக பொறுப்புடன் நடந்துக்கொள்ளுமாறு கொழும்பு நகர் வாழ் மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.