தனியறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன்

Report Print Steephen Steephen in சமூகம்
297Shares

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீர்கொழும்பு பள்ளன்சேன பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனியான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளியில் இருந்து உணவை பெற்றுக்கொள்ள அனுமதியில்லை எனவும் சிறைச்சாலையில் சமைக்கும் உணவை மாத்திரமே வழங்குவதாகவும் அவர கூறியுள்ளார். அத்துடன் பார்வையாளர்களை சந்திக்க அனுமதியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளன்சேன பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் ரஞ்சன் ராமநாயக்க, PCR பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவுகளுக்கு அமைய வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

நீர்கொழும்பு பள்ளன்சேனையில் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான சீர்த்திருத்த மத்திய நிலையம் தற்போது சிறைச்சாலை திணைக்களத்தின் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக செயற்பட்டு வருகிறது.