நீதித்துறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தமை காரணமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற மேஜருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை அனுமதியை வழங்கியது.
நீதித்துறை மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்ற அடிப்படையில் சட்டமா அதிபர் ஆலோசனையின் பேரில் அஜித் பிரசன்னா கைது செய்யப்பட்டார்.
2019 டிசம்பரில் ‘தாய்நாட்டிற்கான போர் வீரர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் 2008-2009 இல் 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக வெளியிட்ட அறிக்கை தொடர்பிலேயே அஜித் பிரசன்னவும் இரண்டு கடற்படை அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டனர்.
.