உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் முக்கியதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹதியாவின் விளக்கமறியல் 2021 ஜனவரி 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவருடன் சேர்த்து பதினொரு பேரின் விளக்கமறியலை நீடித்தது.
2019, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு பின்னர் நடந்த சாய்ந்தமருது குண்டுவெடிப்புக்கு பின்னர் ஹதியா கைது செய்யப்பட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் அவர் விளக்கமறியலில் இருந்தபோது, 2020 நவம்பரில் கொரோனா தொற்றுக்கு உள்ளானார்.
இதேவேளை இலங்கைக்கான மனித உரிமைகள் ஆணையகம், ஹாதியாவுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.