வீடுகளில் இருந்து தைப் பொங்கலை கொண்டாடுங்கள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Report Print Steephen Steephen in சமூகம்
42Shares

திருநாள் காலத்தில் விருந்து பயணங்களை மேற்கொள்வோர் மற்றும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வோருக்கு கொரோனா பரிசோதனை நடத்த பரிசோதனை குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆரம்பத்தில் இருந்து நேற்று வரை ஆங்காங்கே 14 லட்சத்து 27 ஆயிரத்து 366 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தைப்பொங்கல் திருநாள் காலத்தல் நீண்ட விடுமுறை இருப்பதால், வீடுகளில் இருந்து தைப்பொங்கலை கொண்டாடுமாறும், கோயில் போன்ற இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தின் மூலம் நேற்றிரவு மேற்கொண்ட 100 ரெபீட் அன்டிஜன் பரிசோதனைகளில் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் ரெபீட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.