கிண்ணியாவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
40Shares

கிண்ணியாவில் எட்டு கொரோனா தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளதாகக் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெரிய கிண்ணியாவில் ஐந்து பேரும், ஹிஜ்ரா வீதியில் மூன்று பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டதாகக் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெரிய கிண்ணியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய நபர்களை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.