வெள்ளவத்தையில் இருந்து வடக்கு,கிழக்கிற்கு பயணித்த பேருந்துகளில் கொரோனா தொற்றாளிகள்

Report Print Ajith Ajith in சமூகம்
411Shares

நீண்ட தூர பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் போது இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளவத்தையில் இருந்து வடக்குக்கும் கிழக்கும் பயணிக்கும் பேருந்துகளில் இருந்தே இந்த தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று இரவு புறப்படவிருந்த பேருந்தின் நடத்துனர் தொற்றாளியாக இனங்காணப்பட்டார்.

இவர் கடந்த பல நாட்களாக குறித்த பேருந்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,வெள்ளவத்தையில் இருந்து திருகோணமலைக்கு புறப்படவிருந்த பேருந்தில் பயணிக்கவிருந்த 23 அகவையைக்கொண்ட இளைஞர் ஒருவரும் நேற்று கொரோனா தொற்றாளியாக இனங்காணப்பட்டார்.

திருகோணமலையைச் சேர்ந்த அவர் கொழும்பில் பணிபுரிகிறார். நேற்று மாத்திரம் வெள்ளவத்தையில் 100 பேருக்கு மத்தியில் அன்டிஜன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்றும் வெள்ளவத்தையில் 100 அன்டிஜன் சோதனைகள் நடத்தப்பட்டதாக பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.