மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோர் மத்தியில் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேல் மாகாணத்தின் எல்லையில் உள்ள 11 இடங்களில் இந்த சோதனைகள் இடம்பெறவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இரவு பகலாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தைப்பொங்கல் தினத்தில் கோயில்களில் அதிகமான அடியார்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார்.