கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தற்காலிகமாக பதவி இடைநிறுத்தம்!

Report Print Banu in சமூகம்
46Shares

மட்டக்களப்பு - கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்> உடன் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண ஆளுனரால் தற்காலிகமாக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காகவே அவர் இவ்வாறு பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை கிழக்கு மாகாண ஆளுனர் இன்று பிற்ப்பித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் சபையின் உபதவிசாளரான தர்மலிங்கம் யசோதரன் சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.