ஐம்பதாயிரத்தை கடந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

Report Print Kamel Kamel in சமூகம்
50Shares

இலங்கையில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை கடந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் 50,229 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நோய்த் தொற்று உறுதியானவர்களில் 43267 பேர் பூரண குணமடைந்துள்ளனர் எனவும், 6718 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் நாட்டில் கொவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 244 ஆக காணப்படுகின்றது.