சுற்றுலாத்துறை வீழ்ச்சியால் மூன்று லட்சம் குடும்பங்கள் பாதிப்பு! பாதுகாப்பு செயலாளர்

Report Print Murali Murali in சமூகம்

இலங்கையில் சுற்றுலாத் துறையை சார்ந்த 300,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் நல்ல சுகாதார விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“நம் நாட்டில் 300,000க்கும் அதிகமான மக்கள் சுற்றுலாத்துறையை சார்ந்து வாழ்கின்றன. இதன் மூலம் அவர்கள் தங்கள் குடும்பங்களை ஆதரிக்கிறார்கள், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.

இந்த குடும்பங்கள் அனைத்தும் சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீண்டும், நல்ல சுகாதார விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட முறையின்படி சுற்றுலாப் பயணிகளை படிப்படியாக நாட்டிற்கு அழைத்து வரவேண்டும்.

இந்த விடயத்தில் சில குறைபாடுகள் உள்ளன, அந்த குறைபாடுகள் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில், சுகாதார குறைபாடுகள் இன்றி சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம், இதனால் அந்த குறைபாடுகள் மீண்டும் ஏற்படாது. ” என அவர் மேலும் கூறியுள்ளார்.