கொரோனாவால் பலியாகி 29 நாட்களின் பின் எரிக்கத் தயாரான சடலத்தில் மீண்டும் தொற்று!

Report Print Rakesh in சமூகம்
315Shares

கொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்திருக்கின்றார்.

ஆனால், சடலத்தை பொறுப்பேற்பதற்கு அவரது உறவினர்கள் முன்வரவில்லை. தொடர்ந்து உடல் குளிரூட்டப்பட்ட சவச்சாலையில் வைக்கப்பட்டது.

29 நாட்கள் அந்த உடல் அங்கேயே வைக்கப்பட்டிருந்த நிலையில், சடலத்தைத் தகனம் செய்ய சுகாதாரப் பணியாளர்கள் பெற்றபோது பி.சி.ஆர் பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதன்போதே குறித்த உடலில் கொரோனாத் தொற்று அப்போதும் இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.