திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்றையதினம் கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குச்சவெளி, ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த நசீர் நஜாத் (வயது 38) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அவரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 90 போதை மாத்திரைகள் மற்றும் 2 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.