இலங்கையில் பிரித்தானிய கொரோனா - அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் - சுகாதார பிரிவு எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்
108Shares

பிரித்தானியாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மரபணு இலங்கையில் அடையாளம் காணப்பட்டிருப்பது விசேட அம்சமாகும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளளது.

இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவக் கூடியதென்பதனால் இலங்கையில் நோயாளிகளின் எண்ணிக்கை பாரிளளவு அதிகரிக்கும் என பிரதான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்து்ளார்.

நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவு அதிகரிப்பதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலைமையை இலங்கையின் சுகாதார கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாதென அவர் எச்சரிக்கை விடுத்ததுள்ளார்.

இந்த மரபணு மாறிய வைரஸ் பாரிய அளவு பரவினால் மிகவும் ஆபத்தான நிலைமை ஒன்று ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.