கொரோனாவால் வவுனியாவில் களையிழந்தது பொங்கல் பண்டிகை

Report Print Theesan in சமூகம்
81Shares

வவுனியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை பொங்கல் பண்டிகை களையிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நகரப்பகுதிகள் உட்பட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நகரில் அமைந்துள்ள முக்கிய ஆலயங்களில் இம்முறை பொங்கல் நிகழ்வோ, பூசை அனுட்டானங்களோ பெரியளவில் இடம்பெற்றிருக்கவில்லை.

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து சிறியளவில் பொங்கல் நிகழ்வும் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை நகரின் முடக்கம் காரணமாக மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை இம்முறை பெரியளவில் களைகட்டியிருக்கவில்லை.