வவுனியா நகர்ப்பகுதியில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றை நடாத்திவரும் பிரபல வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.
எனினும் குறித்த வைத்தியர் வவுனியாவில் செல்வாக்கானவர் என்ற காரணத்தினால் அவர் கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்படாமல் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நகரில் தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் நகரம் முடக்கப்பட்டுள்ளதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக பல தரப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வரும் நிலையில் குறித்த வைத்தியர் மாற்றப்படாமல் தனது செல்வாக்கின் மூலம் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமை குறித்து பலரும் விசனங்களை தெரிவித்து வருகின்றனர்.