முல்லைத்தீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்

Report Print Vanniyan in சமூகம்
105Shares

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமானது இன்றைய தினம் உலகெங்கும் வாழும் தமிழர்களால் சிறப்பாகவும், சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பொங்கி தைத்திருநாள் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் கொவிட் - 19இன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், அடை மழைக்கு மத்தியிலும் இன்றைய நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.