கொரோனா அச்சத்தின் மத்தியிலும் கிழக்கில் அமைதியான முறையில் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள்

Report Print Rusath in சமூகம்
15Shares

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளைப் பேணி தைப்பொங்கல் பண்டிகையை கிழக்கு மாகாண இந்து மக்கள் மிகவும் அமைதியாக கொண்டாடியுள்ளனர்.

பல இந்து ஆலயங்களில் இன்று காலை முதல் விசேட தைப்பொங்கல் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

ஆலயங்களில் சுகாதார விதிமுறைகளின்படி குறிப்பிட்ட அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

முகக்கவசம் அணிந்து கைகளைக் கழுவி, சமூக இடைவெளிகளைப்பேணி, பக்தர்கள் பொங்கல் பூசை வழிபாடுகளில் பங்கேற்றதை அவதானிக்க முடிந்தது.

பிரதான பூசை வழிபாடுகள் மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தில் பிரதம பூசகர் பிரபாகரன் குருக்கள் தலைமையில் தலைமையில் நடைபெற்றுள்ளது.