13 அகவைச் சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகத்துக்குரிய ஒருவரை கண்டுபிடிக்க தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
புத்தளம், நாரமளாவில் வசிக்கும் இந்த சந்தேகத்துக்குரியவரால் 2020 டிசம்பர் 14 ஆம் திகதி சிறுமி கடத்தப்பட்டார். எனினும் டிசம்பர் 25 ஆம் திகதி குறித்த சிறுமி வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டிசம்பர் 30 ஆம் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், வீட்டுக்கு திரும்பி வந்த டிசம்பர் 30 ஆம் திகதியன்றே குறித்த சிறுமி மீண்டும் கடத்தப்பட்டார்.
இந்தநிலையில் சந்தேககத்துக்குரியவரின் பெற்றோர்களும் இந்த குற்றத்தைச் செய்வதற்கு தங்குமிடம் வசதியை செய்துக் கொடுத்தன் மூலம் சட்டத்தை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரியவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.