நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் கைது

Report Print Rakesh in சமூகம்
48Shares

கடந்த 24 மணி நேரத்தில் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமை போன்ற குற்றச்சாட்டில் 28 பேர் கைதாகியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று இதனைத் தெரிவித்தார்.

இந்த 28 சந்தேகநபர்களும் மேல் மாகாணத்துக்கு வெளியே உள்ள இடங்களில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் இன்று வரை தனிமைப்படுத்தல் சட்டத்தை உதாசீனம் செய்த குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 490 பேர் கைதாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.