அநுராதபுரத்திலுள்ள சிறுவர் காப்பகமொன்றின் பராமரிப்பாளர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
183Shares

அநுராதபுரத்தில் அமைந்துள்ள சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் துஸ்பிரயோகம் மற்றும் ஏனைய குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் குறித்த காப்பகத்தின் பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்திலுள்ள குறித்த சிறுவர் காப்பகம் தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வந்தன.

இந்த நிலையில் அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் ஒரு கட்டமாக காப்பகத்தில் தங்கியிருக்கும் 50 சிறுவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் பல சிறுவர்கள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்தே 53 வயதான காப்பகத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.