மீகொடையில் உள்ள தொழிற்சாலையில் 55 பணியாளர்களுக்கு கொரோனா..

Report Print Ajith Ajith in சமூகம்
59Shares

மீகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றின் 55 பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஹோமாகம சுகாதார அலுவலர் ஜெகத் குமார இதனை அறிவித்துள்ளார்.

இந்த தொழிற்சாலையில் நேற்று 7 தொற்றாளிகள் இனங்காணப்பட்டனர். இதனையடுத்து பணியாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின்போதே ஏனைய 48 பேர் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர்.

தொற்றாளிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சாலையில் தொற்று நீக்கல் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.