இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கும்..

Report Print Ajith Ajith in சமூகம்
165Shares

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா இலவசமாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் அடிப்படையில் இலங்கையின் ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் முகவராக செயற்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசிகளை விநியோகிக்க நாடளாவிய ரீதியில் 4000 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பைசர், ஸ்புட்னிக் வி, எஸ்டெ செனேக்கா ஆகிய தடுப்பூசிகளை இலங்கையில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.