தடலா சுற்றுலா விருந்தகத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கொரோனா

Report Print Ajith Ajith in சமூகம்
77Shares

காலியில் அமைந்துள்ள தடலா சுற்றுலா விருந்தகத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த விருந்தகத்திலேயே இலங்கைக்கு வந்திருந்த இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர்கள் முதலாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டிக்காக தங்கியிருந்தனர்.

தொற்றுக்கு உள்ளானவர்கள் கபுமுல்ல மற்றும் லெலிகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் விருந்தகத்தின் சமையலறையில் பணியாற்றியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தொற்றாளிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.