திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
43Shares

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் 1.6 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புல்மோட்டை அரிசி மலை பகுதியை பார்வையிடுவதற்காக வருகை தந்தவர் போல் நடித்த சந்தேகநபர்களை சுனாமி கம்மான பகுதியில் வைத்து சோதனையிட்ட போது அவர்களிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஓட்டமாவடி - மீராவோடை பகுதியைச் சேர்ந்த செய்யான் அஹமட் சியான், பதுருதீன் முபாரக் (43 வயது) என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.