இலங்கை, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ளக பணியாளர்களை எதிர்பார்க்கும் குவைத்

Report Print Ajith Ajith in சமூகம்
161Shares

இலங்கை, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து உள்ளக உதவியாளராக பணிக்கு அமர்த்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என குவைத் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் அதிகமானவர்கள் குவைத்துக்கு உள்ளக உதவியாளர்களாக செல்வதற்கு தயாராக உள்ளனர்.

அவர்களுக்கு உடனடியாக குவைத்தில் வேலைவாய்ப்புக்களும் கிடைக்கின்றன. குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அந்த நாட்டின் உள்ளக பணியாளர்களில் 11% வீதத்தையே நிரப்புகின்றனர்.

இந்தநிலையில் குவைத்திற்கான பணிகளுக்கு விண்ணப்பிப்போர் சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் கொரோனா தொற்றுக்கான ஆவணங்களையும் உரிய முறையில் சமர்ப்பிக்குமாறு குவைத் டைம்ஸ் தெரிவித்துள்ளது.