ஜனாதிபதி - பிரதமருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்
371Shares

இலங்கை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாம் கட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படும் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முதல் கட்டத்தில் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அடுத்த கட்டமாக பாதுகாப்பு பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்றாம் கட்டத்தில் 60 வயதினை கடந்தவர்களுக்கு வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் லலத் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மூன்றாவது கட்டத்தில் தடுப்பூசி வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.