இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி

Report Print Vethu Vethu in சமூகம்
2651Shares

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்படவுள்ளளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளளார்.

இது தொடர்பான யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உலகின் சில நாடுகள் இவ்வாறான யோசனையை செயற்படுத்துவதற்கு விசேட முடிவுகளை பெற முடிந்ததாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.