உதவ யாருமில்லை இறந்து விடலாம் அம்மா! கண்ணீருடன் கதறும் 43 வயது குழந்தை

Report Print Kanmani in சமூகம்
2598Shares

இறைவனின் படைப்பால் மாற்றுத்திறனாளியாக வாழ்க்கையை தொலைத்த பலர் நம் இடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், யாழ்.கைதடி பகுதியில் சிவரஜனி பொன்னம்பலம் ஊனமுற்ற நிலையில், வயோதிப தாயுடன், அன்றாட வாழ்க்கையை பல இன்னல்களுக்கு மத்தியில் கொண்டு செல்கின்றார்.

இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

இவர்கள் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் +94212030600/ +94767776363