இலங்கையில் ஒரு நாளைக்கு 15,000 முதல் 20,000 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோயியல் தலைமை நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டவர்களை சமூகதத்தில் இருந்து தனிமைப்படுத்தும் செயற்பாடு விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நோயாளிகளிடம் இருந்து சமூகத்துக்குள் உருவாகும் அவர்களின் தொடர்புகளை தடுப்பதே நோய் பரவுதலை தடுக்கும் வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சுகாதார அதிகாரிகள் பி.சி.ஆர் சோதனைகளை போதுமான அளவு மேற்கொண்டு வருகின்றனர் என்றும் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.