யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் ஏற்பட்ட குழப்பம்

Report Print Vethu Vethu in சமூகம்
3397Shares

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வடமராட்சி, பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண நிகழ்வில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 23ஆம் திகதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கொழும்பில் இருந்து சென்ற உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அபாய வலயமாக இருக்கும் கொழும்பில் இருந்து வந்திருந்தமையால், அவரை சுய தனிமையில் இருக்குமாறு பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியிருந்தனர். எனினும் கட்டுப்பாடுகளை மீறி, கடந்த தினங்களில் திருமண வீடு உட்பட பல இடங்களுக்கு அவர் சென்று வந்துள்ளார்.

குறித்த நபருக்கு ஏற்கனவே பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீட்டுக்கு சென்ற சுகாதார அதிகாரிகள், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பாதுகாப்பு கருதி திருமண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டதுடன், இரு தரப்பு வீட்டாரும் 14 நாட்களுக்கு தம்மை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். பிசீஆர் பரிசோதனை பெறுபேறுகளை அடுத்து திருமணம் நிகழ்வினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.